இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தை விளையாட்டு போன்றதல்ல - அமித்ஷா

0 4333

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தை விளையாட்டு போன்றதல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.

ஒடிஷா மாநில கூட்டம் ஒன்றில் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களை சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த போது பிரதமர் மோடி கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்க வில்லை என்றும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட சர்ஜிகல் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

அது இந்தியா அதன் எல்லைகளில் ஆக்கிரமிப்புகளை பொறுத்துக்கொள்ளாது என்பதை உலகுக்கு உணர்த்தியதாகவும் தற்போதும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments