கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனை மனித உடலில் மேற்கொள்ளப்பட்டது

0 21402

சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் தடுப்பூசியின் முதல் கட்டப் பரிசோதனை  மனித உடலில் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல், பல மருத்துவ குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, முன்னதாக குரங்குகள் உடலில்  பரிசோதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஞாயிறன்று முதல் முறையாக, ஆரோக்கியமான மனித உடலில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றால், கொரோனா தொற்றை குணப்படுத்துவதுடன், தடுப்புசி கண்டறியவும் வலிவகுக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments