பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கனை, இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு

0 1111

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.

சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பத்திரப் பதிவிற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நிலையும் உள்ளது. அப்படி செல்லும்போது, பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் பத்திரப் பதிவிற்காக, பதிவு துறை வழங்கிய டோக்கன் கையில் இருந்தால், அதை இ-பாஸ் ஆகக் கருதி அனுமதிக்கலாம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல பத்திரப்பதிவை முடித்துவிட்டு வரும்போது, சார்பதிவாளர் அளித்த ரிசிப்ட் (receipt) அடிப்படையில் பயணிக்க அனுமதிக்கலாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலரும், கூடுதல் தலைமைச் செயலருமான அதுல்ய மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments