24 மணி நேரத்திற்குள் 9 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

0 3642

ஜம்மு - காஷ்மீரில் 2வது நாளாக நீடித்து வரும் தேடுதல் வேட்டையில் மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மொத்தமாக 24 மணி நேரத்தில் மட்டும் 9 தீவிரவாதிகள் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள சோபியான் மாவட்டத்தின் ரேம்பான் கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஞாயிறன்று ராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று காலையிலும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியாத போதும், அவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments