திருப்பதி ஏழுமலையான் கோயில் திறப்பு..!

0 1517

சுமார் 75 நாட்களுக்கு பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று திறக்கப்பட்டது. பக்தர்கள் தனிநபர் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செயதனர்.

முதற்கட்டமாக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் ஆகியோர் நாளொன்றுக்கு 6000 பேர் வீதம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பின் கோயில் திறக்கப்பட்டதால் சுமார் இரண்டரை டன் எடையுள்ள மலர்கள் கொண்டு திருப்பதி ஏழுமையான் கோயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் பிரகாரங்களில் ஆங்காங்கே முழு பாதுகாப்பு கவச உடையுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாமி தரிசன வரிசை, லட்டு கவுண்டர் உள்ளிட்ட இடங்களில் இடைவெளியை கடைப்பிடித்து 6 அடி தூரத்திற்கு ஒருவர் நிற்கும் வகையில் தரையில் ரேடியம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களில் கால் விரல்களால் இயக்கக்கூடிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோயில் உண்டியலை தொட விரும்பும் பக்தர்கள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உடைய நபர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்போர் கோயிலுக்கு வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments