தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படவில்லை..!

0 1408

75 நாட்களுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என எவ்வித வழிபாட்டுத்தலங்களும் இன்று திறக்கப்படவில்லை.

ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து, வழிபாட்டு தலங்களையும் திறப்பது குறித்து கடந்த 3ம் தேதி அனைத்து சமயத் தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்து, அனுப்ப வேண்டி உள்ளதால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments