உணவகங்களில்.. அமர்ந்து சாப்பிட அனுமதி..!

0 1969

உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் உணவகங்கள், தேநீர்க்கடைகளில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில ஹோட்டல்களில் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது.

நெல்லையில் 75 நாட்களுக்கு பின்  ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. ஒரு மேசைக்கு இருவர் மட்டுமே அமர்ந்து உண்ணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் உணவருந்தி சென்றனர்.

புதுச்சேரியிலும் அனைத்து உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பின்னர் ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சேலத்தில் சிறிய உணவகங்களில் மட்டுமே வாடிக்கையாளர்கள்  அனுமதிக்கப்படுகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறையால் பெரிய உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது.

கோவையில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் ஹோட்டல்கள் அனைத்தும் செயல்படத் துவங்கியுள்ளன. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். கிருமிநாசினி வழங்கப்படுவதுடன், ஏசியும் இயக்கப்படவில்லை.

திருப்பூரிலும் 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் செயல்பட துவங்கியுள்ளன. ஒரு மேசைக்கு இருவர் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகின்றனர். குளிர்சாதன வசதி பயன்படுத்தப் படவில்லை.

திருச்சியில் அரசு வழிகாட்டுதலின் படி 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி கொண்டு உணவகங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments