அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளியை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்

0 1297

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புகுந்து, சிகிச்சை பெற்று வந்த ரவுடியை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கரும்பாலை முருகன், 2 தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில், இன்று காலை ஆயுதங்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

கையில் இருந்த ஆயுதங்களில் ரத்தம் சொட்ட சொட்ட மர்மநபர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஓடியதை கண்டு அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏற்கனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க முருகன் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments