மதுவுக்கு கொரோனா வரியை நீக்க டெல்லி அரசு முடிவு

0 743

டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டகொரோனா சிறப்பு வரியை ரத்து செய்ய கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து வகை மதுபானங்களில் அதிகபட்ச சில்லறை விலையுடன் 70 விழுக்காடு கொரோனா சிறப்பு வரியாக விதிக்கப்படுவதாக கடந்த மாதம் 5ம் தேதி டெல்லி அரசு அறிவித்தது.

மதுபானங்களின் விலையை உயர்த்தியதால் டெல்லி அரசுக்கு 175 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்தது. இந்த நிலையில் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா சிறப்பு வரியை வரும் 10 ம் தேதி முதல் நீக்குவது எனவும், அதற்குப் பதிலாக மதிப்பு கூட்டப்பட்ட வரியை 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments