அண்டை மாநிலங்களுக்கான எல்லையைத் திறந்தது டெல்லி அரசு

0 467

டெல்லி அரசு அண்டை மாநில எல்லைகளில் சரக்கு மற்றும் பொது வாகனப் போக்குவரத்துக்கு விதித்த தடையை இன்று முதல் தளர்த்தியுள்ளது.

அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஹரியானாவுக்கு சென்று வர இ பாஸ் தேவையில்லை என்றும் நேற்றிரவு வெளியிடப்பட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலையில் இருந்தே நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் அங்கிருந்து டெல்லிக்கு வரவும் ஏராளமான வாகனங்கள் சாலையில் திரண்டன.

தலைநகரில் 74 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் ஷாப்பிங் மால்களும் உணவகங்களும் திறக்கப்படுகின்றன.

ஆயினும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த ஓட்டல்களின் தங்கும் அறைகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் வழிகாட்டல்களை பின்பற்றுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments