இரண்டே மாதங்களில் 97 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது ஜியோ நிறுவனம்

0 1590

ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் நிறுவனமான ஜியோவில் அபுதாபி முதலீட்டு ஆணையம் சுமார் ஐயாயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தின்  1 புள்ளி 16 சதவீத பங்குகள்  அபுதாபி முதலீட்டு ஆணையத்திற்கு விற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 7 வாரங்களில் பேஸ்புக், சில்வர் லேக் போன்ற 7 பெரு நிறுவனங்களால், ஜியோ நிறுவனத்தில் சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments