டெல்லிவாசிகளுக்கு மட்டுமே டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பால் சர்ச்சை

0 1495

படுக்கை வசதி பற்றாக்குறையாக இருப்பதால், டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் 29.000 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 812 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்த நிலையில் , கொரோனாவால் பாதிக்கப்படும் டெல்லி மக்களை காப்பாற்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துள்ள முடிவுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அரசின் புதிய உத்தரவுப்படி, டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா  சிகிச்சையளிக்கப்படும். அது, தனியார் மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி. அரசு மருத்துவமனைகளாக இருந்தாலும் சரி. கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அல்லது அவர்களின்  பெற்றோர் அல்லது மனைவி ஆகியோரின் ஆதார்கார்டு, ரேசன்கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லெசென்ஸ், குடிநீர், மின்சாரம் மற்றும் டெலிபோன் கட்டிய ரசீதுகள் போன்றவற்றை ஆதாரமாக கொடுக்க வேண்டும். நோயாளியின் பெயருக்கு வந்துள்ள தபால் கடிதங்களையும் ஆதாரமாக காட்டலாம். குறிப்பாக, ஆதார்கார்டு ஜூன் 7- ந் தேதிக்கு முன்னதாக பெற்றிருக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநிலத்தின் டெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல் ஒப்புதல் பெற்றதும், இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துவிடும். இது குறித்து டெல்லி மாநில சுகாதாரத்துறை செயலர் பத்மினி சிங்லா கூறுகையில், '' கொரோனா சிகிச்சைக்கு வருபவர்களிடத்தில் டெல்லியில் வசிப்பவர் என்பதற்கான உரிய ஆவணங்களை சரி பார்த்த பிறகே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் '' என்று தேரிவித்துள்ளார். 

டெல்லியில் 1.91 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில், 14.6 கோடி பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி போன்றே ஒவ்வொரு மாநிலங்களும் முடிவெடுத்தால் போதிய ஆவணங்களை காட்ட முடியாதவர்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் இங்கே எழுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments