எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு

0 1415

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் பேசி தீர்த்துக் கொள்ள, இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த 6ம் தேதி, ராணுவ உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த பேச்சுவார்த்தை, இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி நல்ல மற்றும் நேர்மறையான சூழலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - சீனா இடையேயான உறவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்ற, இருதரப்பு தலைவர்களின்  ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு இருப்பதாகவும், எனவே அமைதி நிலவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் அமைதியை உறுதி செய்வதற்காக இருநாட்டு ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மீண்டும் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments