கொரோனா புதிய பாய்ச்சல் உச்சம் தொட்ட சென்னை

0 3040

வேலூரில் 20 வயது இளம்பெண் ஒருவர், கொரோனாவால் உயிரிழந் துள்ளார். புதிய உச்சம் தொட்ட சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22  ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள், பாதிப்பும், உயிர்ப்பலியும் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் புதிதாக ஆயிரத்து 156 பேர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டிருப்பது, இது 5-வது நாளாகும். புதிய பாய்ச்சல் காட்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு, 22 ஆயிரத்தை தாண்டி விட்டது.

செங்கல்பட்டில் புதிதாக 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மதுரை மற்றும் தூத்துக்குடியில் தலா 14 பேரும், திண்டுக்கல் மற்றும் விழுப்புரத்தில் புதிதாக தலா 11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, அதே அளவில் குணம் அடைந்தவர்கள், வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இரை ஆன 269 பேரில், 212 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். செங்கல் பட்டில் 15 பேரும், திருவள்ளூரில் 11 பேரும் பலி ஆகி உள்ளனர். காஞ்சிபுரத்தில் 4 பேரும், மதுரை மற்றும் வேலூரில் தலா 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சென்னையில் மட்டும் 22 ஆயிரம் பேர், வைரஸ் தொற்றின் பிடியில் சிக்கி உள்ளனர். குறிப்பாக வட சென்னை பகுதியில், கொரோனா புதிய பாய்ச்சல் காட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments