கொரோனாவால் உயிரிழந்தவர் சடலம் அலட்சியமாக தள்ளப்பட்ட விவகாரம் -அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ்

0 1635

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் சடலத்தை அலட்சியமாக தள்ளி விட்ட விவகாரம் தொடர்பாக, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர், புதுச்சேரி வில்லியனூர் அருகிலுள்ள மகன் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்த வருவாய்த்துறை மற்றும் மருத்துவ பணியாளர்கள் சவக்குழியில் அலட்சியமாக தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கமளிக்க, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments