குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்க குஜராத் காங்.எம்எல்ஏக்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைப்பு

0 1524

குஜராத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.

182 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் சார்பில் 65உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களில் 3காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனை அடுத்து காங்கிரஸ் மேலிடம் தங்களது எம்எல்ஏக்களை மாநிலங்களவை தேர்தல் முடியும் வரை பாதுகாக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments