மகாராஷ்ட்ராவில் 10,000 ரெமிடிசிவர் குப்பிகளை வாங்க அரசு திட்டம்

மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் பத்தாயிரம் ரெம்டிசிவர் மருந்து மற்றும் மாத்திரை குப்பிகளை கையிருப்பில் வைத்திருக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பத்தாயிரம் குப்பிகளை விலைக்கு வாங்கி கையிருப்பில் வைக்கப்போவதாக அறிவித்த மராட்டிய சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப், கொரோனா சிகிச்சைக்கு அவற்றைப் பயன்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
விலை உயர்ந்த இந்த மருந்து ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கொரோனா பாதிப்புடையவர்களை குணப்படுத்த ரெம்டிசிவர் மிகுந்த பயன் அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதையும் சுகாதார அமைச்சர் தமது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
महाराष्ट्र शासन Remdesivir च्या 10000 vial इंजेक्शन खरेदी करणार.प्रयोगशाळा, प्राणी आणि क्लिनिकल अभ्यासाच्या पुराव्यांच्या आधारे MERS- CoV आणि SARS मध्ये यास आशादायक परिणाम मिळाला आहे, जो देखील कोरोना व्हायरसमुळे होतो. 1/2@DrLahanetp @CMOMaharashtra @ChaiMIRROR
— Rajesh Tope (@rajeshtope11) June 6, 2020
Comments