கொரோனா புதிய பாய்ச்சல்.. உச்சம் எட்டிய அசுர வேகம்..!

0 2681

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 9 ஆயிரத்து 887 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் தொற்று உறுதி ஆன சுமார் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் 9 ஆயிரத்து 887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 294 பேர் மரணம் அடைந்ததால், கொரோனா உயிர்ப் பலி 6 ஆயிரத்து 560 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹா ராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, உயிர்ப்பலி, 2 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது.

பட்டியலில் 2 - ஆவது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

3- வது இடம் வகிக்கும் டெல்லியில் 26 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட, 4 - வது இடம் வகிக்கும் குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தானில், கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை தாண்ட, உத் தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்திலும் பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதுதவிர, கர்நாடகா, பீஹார், ஆந்திரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அறிகுறி தெரிந்த கேரளாவில் வைரஸ் தொற்று, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments