'அந்த ஒரு காட்சியால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தேன் ! 'முத்து ' படம் குறித்து மனம் திறந்த ஜெயராம்

0 28017
நடிகர் ஜெயராம்


கடந்த 1995- ம் ஆண்டு வெளியான முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் கூட ஹிட் அடித்தது. 'தில்லானா தில்லானா ' பாட்டு தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் சரத் பாபு, ரஜினியின் எஜமானார் வேடத்தில் நடித்திருப்பார்.

ஆனால், இந்த வேடத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் ஜெயராமைதான் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அப்ரோச் செய்தார். சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்த நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஜெயராமுக்கும் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க கொள்ளை ஆசைதான். ஆனால், படத்தில் இடம் பெற்றிருந்தே ஒரே ஒரு காட்சி அவரை முத்து படத்தில் நடிக்க விடாமல் தடுத்து விட்டது.

முத்து படம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த படத்தில் தான் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை ஜெயராம் கூறியுள்ளார். '' முத்து படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் சரத்பாபு , நடிகர் ரஜினிகாந்தை கன்னத்தில் அடிப்பது போல காட்சி இருந்தது.  அந்த  காட்சியில் நடிக்க நான்  தயராக இல்லை. ரஜினிகாந்தை நான் அடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டால் அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் என் மனதுக்குள் இருந்தது. அதனால், முத்து படத்தில் நான் நடிக்காமல் ஒதுங்கி விட்டேன் '' என்று தெரிவித்துள்ளார்.

முத்து படம் 'தேன்மாவில் கொம்பத்து' என்ற மலையாள படத்தை தழுவிதான் தமிழில் எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments