லேயில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்-மத்திய ஆயுஷ் அமைச்சகம்

0 847

லேயில் (Leh) நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம்தான் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச யோகா தினம் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி லடாக் யூனியன் பிரதேச தலைநகர் லேயில் 21ம் தேதி பிரமாண்ட யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மோடி கலந்து கொள்வார் என்று மார்ச் மாதம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் போன்ற காரணத்தினால் அதில் மோடி பங்கேற்பது சந்தேகம்தான் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடேசா (Secretary Vaidya Rajesh Kotecha), பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments