ஆன்லைன் வகுப்பு படுத்தும் பாடு... வீட்டு கூரையில் மாணவி!

0 9449
வீட்டு கூரை மீது ஏறி அமர்ந்து படிக்கும் மாணவி


கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்படுகிறது. மாணவ மாணவிகளிடத்தில் ஆன்லைனில் பாடம் படிக்க செல்போன்கள், டி.வி போன்றவை இல்லாத நிலையும் உள்ளது. ஆன்லைனில் கல்வி கற்க முடியாத சூழலில் 9- ம் வகுப்பு படித்து வந்த தேவிகா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த மாணவி நமீதா நாராயணன். இவர் குட்டிபுரத்திலுள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கேரளாவில் கடந்த திங்கள் கிழமை ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், மாணவியின் அறையில் போதிய நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் அவரால் சரிவர படிக்க முடியவில்லை.

வீட்டை சுற்றி பல்வேறு இடங்களில் நின்று சோதித்து பார்த்தும் நெட் இணைப்பு ஸ்பீடாக இல்லை. இதனால், மாணவி சரிவர படிக்க முடியாத நிலை உருவானது.

கடைசியில் வேறு வழியில்லாத நமீதா தன் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கூரை மீது ஏறிய பிறகே நெட் இணைப்பு ஸ்பீடாக கிடைத்துள்ளது. மாணவி நமீதா வீட்டு கூரை மீது ஏறி ஆன்லைன் பாடம் படிக்கும் விஷயம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளை எட்டியது. இதையடுத்து, நமீதாவின் வீட்டுக்கு வந்த நிறுவன ஊழியர்கள் ஹைஸ்பீட் நெட் வசதி செய்து கொடுத்தனர்.இது குறித்து நமீதா இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி யால் தான் மனமகிழ்ந்து போனேன் என்றும் தன்னால், இப்போது நல்ல முறையில் படிக்க முடிகிறது எனவும்  தெரிவித்துள்ளார். 

நமீதா போன்று இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவ - மாணவிகள் இருக்கின்றனர். அவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments