இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது

0 1778

லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கிற்கு தீர்வு காண, இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்தியா-சீனா இடையே எல்லைத் தகராறு உள்ள நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் அண்மையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாங்காங்சோ (Pangong Tso) அருகேயும், கல்வான் பள்ளத்தாக்கு அருகே 3 இடங்களிலும், சீனப் படைகளின் அத்துமீறலால் இந்த மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி இரவு, பாங்காங்சோ அருகே இரு தரப்பு வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு, வீரர்கள் காயமடைந்தனர். இரு தரப்பிலும் வீரர்கள் குவிப்பு, ஆயுத தளவாடங்களை களமிறக்குவது என அசாதாரண சூழ்நிலை உருவானது. அதேசமயம், ராணுவ அதிகாரிகள் நிலையில் பல கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், சீன எல்லைக்குள் உள்ள மோல்டோ (Moldo) பகுதியில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments