முட்டை விலை 35 காசுகள் உயர்வு..!

0 1006

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 25 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனை அதிகரித்து முட்டை விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 35 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 25 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளதாக கூறும் கோழிப்பண்ணையாளர்கள், அதே சமயம் தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாக என்று குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments