நாட்டுக்காக கணவர் உயிரிழந்தது பெருமையே - வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி

0 31717

நாட்டுக்காக தனது கணவர் உயிரிழந்தது பெருமை அளித்தாலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பேரிழப்பு என்று காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்  வெத்தலைகாரன்காடு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணமடைந்தார். அவரின் உடலுக்கு இன்று மாலை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தங்கள் குடும்பத்தின் நிலையை கருதி தனக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கவும் மதியழகனின் மனைவி தமிழரசி அரசுக்கு கோரி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments