கொரோனா பாதிப்பில்.. சீனாவை முந்தப் போகும் மகாராஷ்டிரா..!

0 1172

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்பதாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், விரைவில் சீனாவை முந்த உள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்பதாயிரத்து 229 ஆக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இரண்டாயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இதே வேகத்தில் அதிகரித்தால் ஓரிரு நாட்களில் சீனாவை மகாராஷ்டிர மாநிலம் முந்திவிடும்.

சீனாவில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 30 ஆக உள்ளது. சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை நாலாயிரத்து 634ஆக உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் இரண்டாயிரத்து 849 ஆக உள்ளது குறிப்பிடத் தக்கது. மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 35 ஆயிரத்து 156 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments