மாமிசம் உண்ணும் சிறிய வகை டைனோசரின் புதைப்படிமங்கள் கண்டுபிடிப்பு

0 662

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் மாமிசம் உண்ணும் சிறிய வகை டைனோசரின் புதைப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு ரியோ நீக்ரோ(Rio Negro) பகுதியில் சுமார் 9 கோடி ஆண்டுகள் பழமையான ஓவரொராப்டர் என்ற வகை டைனோசரின் புதைப்படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

5 அடி நீளம் கொண்ட இந்த டைனோசர்கள் இறகுகளை கொண்டது, நீண்ட கால்களுடன் வேகமாக ஓடக்கூடியது எனக் கூறும் நிபுணர்கள், பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கான திறவுகோலை இது கொண்டிருக்கக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments