கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை

0 578

கேரளாவில் தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

கேரளாவில் கடந்த 1ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளாவையொட்டி தமிழகத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை, தடிகாரகோணம் போன்ற பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் களியக்காவிளை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் மிதமான மழையும், குளச்சல், நாகர்கோவில், தக்கலை போன்ற பகுதிகளில் லேசான மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திலுள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments