ஜியோவில் சில்வர் லேக் கூடுதல் முதலீடு..!

0 771

அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் கூடுதலாக நாலாயிரத்து 547 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 6 வாரங்களில் அமெரிக்காவின் 5 நிறுவனங்கள், அமீரகத்தின் முபாதலா நிறுவனம் ஆகியவற்றிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஏற்கெனவே மே நான்காம் நாள் ரிலையன்ஸ் ஜியோவில் ஐயாயிரத்து 656 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒன்று புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடு பங்குகளை வாங்கியிருந்தது. இந்நிலையில் ஜியோவில் தனது பங்குகளை 2 புள்ளி பூஜ்யம் எட்டு விழுக்காடாக உயர்த்திக் கொள்வதற்காகக் கூடுதலாக நாலாயிரத்து 547 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இத்துடன் சேர்த்துக் கடந்த 6 வாரங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொத்தம் 92 ஆயிரத்து 202 கோடி ரூபாயை முதலீடுகளாகப் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments