வைரஸ் தொற்று கலங்கும் வையகம்..!

0 1822

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அந்நாட்டில் 19 லட்சத்து, 65 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 975 உயிரிழந்ததால் அங்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஆனால் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உயிரிழப்பில் பிரேசில் முன்னேறி வருகிறது. நேற்று மட்டும் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நாடுகளுக்கு அடுத்ததாக உயிரிழப்பிலும், பாதிப்பிலும் வேகமாக முன்னேறி வருகிறது மெக்ஸிகோ. கடந்த 24 மணி நேரத்தில் 816 பேர் இறந்ததால் அங்கு இதுவரை 12 ஆயிரத்து 500க்கும் அதிகமான மக்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஏனைய நாடுகளில் உயிரிழப்புகள் இரட்டை இலக்கத்தில் இருக்கும் நிலையில் ரஷ்யாவில் நேற்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் போலவே இங்கிலாந்தில் 357 பேரும், இந்தியாவில் 286 பேரும், பெருவில் 131 பேரும் ஒரே நாளில் வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேரும், பிரேசிலில் 2 லட்சத்து 88 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments