குஜராத்தில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் நெருக்கடியில் காங்கிரஸ்

0 2732

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்,ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில் எஞ்சிய எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் வகையில் கட்சித் தலைமை அவர்களை குஜராத்தின் மையப்பகுதியில் உள்ள ஆனந்த் அருகே உள்ள சொகுசு விடுதிக்கு இடம் மாற்றியுள்ளது.

15 காங்கிரஸ் எம்.எல்,ஏக்கள் சொகுசுப் பேருந்து மூலம் அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்கு எம்.எல்.ஏக்களை உபசரித்து, கவனிக்கும் பொறுப்பு பாரத் சிங் என்ற காங்கிரஸ் பிரமுகருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட உள்ள காங்கிரஸ் மூன்று எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், வெற்றி வாய்ப்பை இழக்க கூடும் என்று தகவல் வெளியானது. இதையடுத்து எம்.எல்.ஏக்களை விடுதிக்கு மாற்றியுள்ளது குஜராத் காங்கிரஸ் கட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments