ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசால் அமல்படுத்தப்படுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.
நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதை அவர் தொடர்ந்து சாடி வருகிறார். இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன், இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியுட்டுள்ளார்.
This is what a failed lockdown looks like. pic.twitter.com/eGXpNL6Zhl
— Rahul Gandhi (@RahulGandhi) June 5, 2020
அதில், மேற்குறிப்பிட்ட நாடுகளில் ஊரடங்கு தளர்வுக்கு பின்பு நோய்த்தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
Comments