அரசு அதிகாரியை சப்பலால் மொத்திய டிக்டாக் நடிகை..! விவசாயிகளுக்கு ஆதரவாக ஆவேசம்

0 2565

டிக்டாக்கில் பிரபலமாகி பாரதீய ஜனதாவில் இணைந்த நடிகை ஒருவர், விவசாயிகள் கூட்டத்தில் அதிகாரி ஒருவரை காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தி சினிமா பாடல்களுக்கு நளினத்துடன் ஆட்டம் போட்டு டிக்டாக்கில் பிரபலமானவர் அரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி பொகட் என்பவர் தான் அரசு அதிகாரியை அடித்து துவைத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார் ..!

ஹிசார் மாவட்டத்தில் வசித்து வரும் சோனாலி பொகட், வசதியானவர் என்றாலும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பாரதீய ஜனதாவில் இணைந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வந்தார்...

இந்த நிலையில் நடிகை சோனாலி, ஹிஷாரில் நடந்த விவசாயிகளுக்கான உள்ளூர் சந்தைகுழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மார்க்கெட்டிங் கமிட்டி செயலாளர் சுல்தான் சிப்பு என்பவரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார் சோனாலி...

ஒரு அடியோடு அடங்காத சோனாலி, தனது காலில் கிடந்த காலணியைக் கழட்டியும் தொடர்ந்து சரமாரியாக அடித்து துவைத்தார்

தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments