நாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரிப்பு

0 1403

இந்தியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை 48 புள்ளி 27 சதவீதத்தை எட்டி உள்ளதாக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 355 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வை பொறுத்த வரை, 20 சதவீத பாதிப்பு, மும்பையில் மட்டுமே நிகழ்ந்துள் ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, மஹாராஷ்டிராவில் கொரோனா சோதனை அதிகரிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளது.

அதேநேரம், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2 புள்ளி 80 சதவீதமாக உள்ளதாகவும் சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரி சோதனை ஆய்வு கூடங்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்த்தப்பட்டு உள் ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments