பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்-ஏ.ஐ.சி.டி.இ.

0 38635

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதன் சுற்றறிக்கையில் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களிடம் இருந்து பெருமளவிலான புகார்கள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் குறைகளை தொடர்புடைய பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியிடம் தெரிவிக்கலாம் என்றும், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும், உள்ளூர் சூழலைப் பொறுத்தும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு அட்டவணையைப் பின்பற்றி செமஸ்டர் தேர்வு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments