உதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 முதியவர்கள்

0 20498

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டிணத்தில் வறுமையின் காரணமாக உதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல் மனநிலை குன்றிய மனைவி, 8 வயது மகளோடு வசித்து வந்துள்ளார். வறுமை காரணமாக அந்தச் சிறுமி, அந்தத் தெருவிலுள்ள வீடுகளுக்குச் சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அப்படி உதவி கேட்டுச் சென்ற வீடுகளில் சிலர் சிறுமிக்கு பண உதவி செய்துவிட்டு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். அந்த வகையில் அதே பகுதியைச் சேர்ந்த 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன், 53 வயதான ஜாகீர் உசேன், 66வயதான அப்துல் ஜாபர் ஆகியோரும் 2 சிறுவர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments