10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..!

0 1194

கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் 10வது நாளாக ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அமெரிக்காவில் போலீசால் தாக்கப்பட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட் மரணமடைந்ததற்கு நீதி கோரியும் இனபாகுபாடுக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் கடந்த சில நாட்களாக வன்முறை வெடித்து வந்தது. இந்த நிலையில் நியூயார்க், போர்ட்லேண்ட், பிலடெல்பியா(Philadelphia) உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்த அமைதி பேரணியை கையில் எடுத்துள்ளனர்.

இதனிடையே, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையை சுற்றி புதிதாக அமைக்கப்படும் கான்கீரிட் தடுப்புகள் முன்பு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில், ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டிடங்கள் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.

மெக்சிகோவில் அமெரிக்க தூதரகம் வாயிலில் கருப்பு உடையணிந்த போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏத்தி, பூங்கொத்துகள் வைத்து ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments