செமஸ்டர் தேர்வுக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பு வெளியீடு

0 8891

செமஸ்டர் தேர்வுக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகளை வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து, முதல் கட்டமாக அதற்கான திருத்தப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, கடந்த கல்வியாண்டின் (2019 - 2020) இரண்டாவது செமஸ்டருக்கான அனைத்து அலகுகளையும் உள்ளடக்கியதாக புதிய வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நன்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கும் வகையில் கூடுதலாக விருப்பத் தேர்வுகளுடன் வினாத்தாள் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளுக்கு மட்டும் திருத்தப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments