மாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்! ராஜஸ்தானில் அமெரிக்கா போல சம்பவம்

0 7282

அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பினத்தவரைபோலீஸ் ஒருவர் கழுத்து பகுதியை முட்டியால் அழுத்தியதால், அவர் இறந்து போனார். சுமார் 8.46 விநாடிகள் ஜார்ஜ் பிளாயிடின் கழுத்து போலீஸின் முட்டியால் அழுத்தப்பட்டிருந்தது. இதனால், மூச்சுத் திணறி ஜார்ஜ் பிளாயிட் இறந்து போனார். இந்த மரணத்தையடுத்து, அமெரிக்காவில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அமெரிக்க அரசு தவித்து வருகிறது.

இந்த நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது . ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் நேற்று முகேஷ் குமார் என்ற இளைஞர் முகத்தில் மாஸ்க் அணியாமல் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த இரண்டு போலீஸ்காரர்கள் , 'ஏன் மாஸ்க் அணியவில்லை ' என்று அவரிடத்தில் கேட்டுள்ளனர். இதனால், முகேஷ்குமாருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது, போலீஸ்காரர் ஒருவர், முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்தினார். சில விநாடிகள் முகேஷ்குமாரின் கழுத்தில் போலீஸ்காரரின் முட்டி இருந்தது. தற்போது, இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து விளக்கமளித்துள்ள ஜோத்பூர் போலீஸ் கமிஷனர் சந்த்ரா, '' போலீஸ்காரர்களிடத்தில் முகேஷ்குமார் அத்துமீறி நடந்துள்ளார். கண்களில் குத்தி விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீஸார் ஜீப்பை வரவழைத்து அவரை ஏற்ற முயன்றுள்ளனர். அப்போது, போலீஸ்காரர்களை முகேஷ் குமார் தாக்க தொடங்கினார். இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தாங்கள் தாக்கப்படாமல் இருக்க போலீஸார் இப்படி செயல்படுவது வாடிக்கையானதுதான். சீருடையில் இருக்கும் போலீஸாரை தாக்குவது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமதிப்பதற்கு சமம்'' என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments