உச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு

0 4806

உலக அளவில், கொரோனா பாதிப்பில் 7ஆவது இடம் வகிக்கும் இந்தியா, ஓரிரு நாளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி, 6ஆவது இடத்தை பிடிக்க உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 பேர் " டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டுள்ளதால், கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

உலக நாடுகளை உலுக்கும் கொரோனா, இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வரு கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 851 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை 2 லட்சத்து 27 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேபோல, ஒரே நாளில் 273 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹா ராஷ்டிராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 800 - ஐ எட்டி உள்ளது. அங்கு, உயிர்ப்பலி, 2 ஆயிரத்து 710 ஆக உயர்ந் திருக்கிறது.

பட்டியலில் 2 - ஆவது இடம் வகிக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

3- வது இடம் வகிக்கும் டெல்லியில் 25 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட, 4 - வது இடம் வகிக்கும் குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 500-ஐ தாண்டி விட்டது.

ராஜஸ்தானில், கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை நோக்கி முன்னேற, உத் தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா பிடியில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 355 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பி விட்டனர்.

ஒரே நாளில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா பரிசோ தனை நடத்தப்பட்டுள்ளதால், இதன் எண்ணிக்கை 43 லட்சத்து 86 ஆயிரத் தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனாவால் சுமார் ஒரு லட்சம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்தை தாண்டி விட்டது. உலக அளவில் 6ஆவது இடம் வகிக்கும் இத்தாலி யில், 2 லட்சத்து 34 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, இரண்டொரு நாளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி, இந்தியா, உலக அளவில், கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா 12 - வது இடம் வகிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments