ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது-எலான் மஸ்க்

0 3566

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கூறி கோடீஸ்வர தொழிலதிபரான டெஸ்லா கார் நிறுவன அதிபர் எலான் மஸ்க் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றில் இப்படி குறிப்பிட்டுள்ள அவர், அமேசான் போன்று ஒரு துறையில் ஒரே நிறுவனத்தின் ஏகாதிபத்தியம் இருப்பது தவறு என தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த புத்தகம் ஒன்றை தனது விற்பனை தளத்தில் இருந்து அமேசான் நீக்கிவிட்டதாக எழுத்தாளர் ஒருவர் கூறிய புகாரின் எதிரொலியாக, எலான் மஸ்க் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், அந்த புத்தகம் தவறுதலாக நீக்கப்பட்டு பின்னர் விற்பனை தளத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments