சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் குழு நியமனம்

0 2685

சென்னையில் கொரோனா தடுப்பு களப் பணியில் உள்ள குழுக்களை கண்காணிக்க 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க, கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்வகிப்பது, பரிசோதனைகள் செய்வது, தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கவனிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய களப் பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியும், களப் பணிக் குழுக்களும் மேற்கொள்ளும் நிவாரண மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை கண்காணித்து மேற்பார்வை செய்ய சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகனும், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜும், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments