ஜெ.அன்பழகன் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்...

0 3283

கவலைக்கிடமான நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

சுவாசக் கோளாறு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் ஜெ.அன்பழகன் சுவாசித்து வருவதாகவும், வெண்டிலேட்டர் மூலமே அவர் 80 சதவீத ஆக்ஸிஜனை பெறுவதாகவும் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து, சிகிச்சையளிக்கும் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் உத்தரவின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன், சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கியதாக தெரிவித்தார்.

நேற்றைய நிலையோடு ஒப்பிடும்போது, ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறினார்.

இதனிடையே, ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments