கிடைக்கும் விலைக்கு குடியிருப்புகளை விற்றுக் கொள்ளுங்கள்-ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

0 14546

கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள நீண்ட காலம் பிடிக்கும் என்பதால்,  விற்கப்படாமல் உள்ள குடியிருப்புகளை  கிடைக்கும் விலைக்கு விற்றுக் கொள்ளுமாறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்டுமான நிறுவங்களின் அமைப்பான தேசிய நிலவணிக மேம்பாட்டுக் கவுன்சில் ஏற்பாடு செய்த ஆனலைன் சந்திப்பில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். அது குறித்து வெளியான வீடியோ பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

கட்டுமானத் துறைக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக அவர்  தெரிவித்ததாக கூறப்படுகிறது. குடியிருப்புகளின் விலையை குறைக்காவிட்டால் தேக்க நிலை தொடர்வதுடன், வங்கிக் கடனுக்காக அவை முடக்கப்படவும் வாய்ப்புள்ளதாக பியூஷ் கோயல்  குறிப்பிட்டதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments