உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் - பிரதமர் மோடி

0 440

உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கருப்பொருளை முன்வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உயிரினங்களின் பன்முகத்தன்மையையும், பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் முக்கியம் என்பதையும் பல்லுயிர்ப் பெருக்கம் விளக்குகிறது. இதை குறிப்பிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

நம்மோடு பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர, நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் தலைமுறைகளை இன்னும் சிறந்த பூமியை விட்டுச் செல்வோம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments