கொரோனா : இரண்டு நாள்களில் இந்தியா, இத்தாலியை முந்தும் ; உயிரிழப்பு குறைவு என்பது ஆறுதல்!

0 2369


நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. லான்டௌனில் தளர்வு அறிவிக்கப்பட்டதால், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஜனவரி 30- ந் தேதி கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது இந்தியாவில்  2,16,919 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 

கடைசி 15 நாள்களில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9,304 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதே வேகத்தில் கொரோனா பரவி வந்தால் , இன்னும் இரு நாள்களில் இத்தாலியை நாம் முந்தி விடுவோம்.

தற்போது, கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி 6- வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் 2,33,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரு நாள்களில் இந்தியாவில் 2,34,919 கொரோனா நோயாளிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.  எனவே, இரு நாள்களில் இந்தியா 6- வது இடத்துக்கு வந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் , இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கும் செய்தி. இத்தாலியை விட இறப்பு சதவிகிதம் 5 மடங்கு இந்தியாவில் குறைவு ஆகும் .இந்தியாவில் கொரோனா வைரஸால் நேற்று வரை 6,075 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் 33, 689 பேர் இறந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 12- வது இடம். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில்  அமெரிக்கா , ரஷ்யா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலிக்கு  அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments