உலகில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியது

0 727

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் நாள்தோறும் ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரமாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 96 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனா மையமாக திகழும் அமெரிக்காவில் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments