ரேசன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி முதல் ரூ.50,000 சிறுகடன் உதவி

0 12930

ரேசன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி முதல் சிறு கடனாக  50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு 2 ஆயிரத்து 564 கோடி ரூபாய் பயிர் கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ரேசன் அட்டையை வைத்து கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் சிக்கல்கள் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் என்ற கேள்விக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்கெனவே துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தில் அளிக்கப்பட்ட கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments