மத்திய செம்மொழி தமிழாய்வு இயக்குநராக சந்திரசேகரன் நியமனத்துக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கடிதம்

0 1549

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநராக சந்திரசேகரனை நியமித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் எழுதிய கடிதத்துக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்த் எழுதிய கடிதத்தின் புகைபடத்துடன் கூடிய அந்த பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments