வாஷிங்டனில் போராட்டக்காரர்களை வீட்டில் தங்க வைத்து உதவிய அமெரிக்க வாழ் இந்தியர்

0 1042

வாஷிங்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்க வைத்து  உணவு உள்ளிட்ட உதவிகளை செய்த  அமெரிக்க வாழ் இந்தியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கருப்பினத்தவர் ஜார்ஜ் புளோயிட் என்பவர் போலீசார் ஒருவர் கழுத்தில் முட்டி போட்டு அழுத்தியதால் உயிரிழந்தார். இதை கண்டித்து வாசிங்டனில்  ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் 75 பேருக்கு ராகுல் துபே என்ற அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் தனது வீட்டில் இரவு முழுவதும் தங்க இடமளித்து பல்வேறு உதவிகளை செய்தார். கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவில் அவர் வசிக்கிறார். இதுகுறித்த செய்திகள் வெளியானதும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments