கொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா? சென்னை மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள மரணம்

0 4922
கொரோனாவுக்கு சிகிச்சை


சென்னை , ராயபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). மாநகராட்சி ஊழியரான  இவருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருந்தது., தொடர்ந்து மே 18- ந் தேதி கீழ்பாக்கம் மருத்துவமனையில் 10 நாள்களாக சிகிச்சையில் இருந்தார். சிகிச்சைக்கு பிறகு, செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு நெகடிவ் வந்ததால், மே 28- ந் தேதி மருத்துவர்கள் அவரை வீடு செல்ல அனுமதித்தனர்.

அடுத்த நாள் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகம் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு 10 நிமிடத்தில் இறந்து போனார். பலியான ஆறுமுகத்துக்கு ஹெபர்டென்ஷன், சர்க்கரை நோய் போன்ற வியாதிகளும் இல்லை.

ஹைபோக்ஸியா  காரணமாக, ஆறுமுகம் இறந்து போனதாக சொல்லப்படுகிறது. திசுக்களில் இருக்கும் ஆக்ஸிஜன் உரிஞ்சப்படுவதால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட ஹைபோக்ஸியா வழி வகுக்கிறது.

தமிழகத்தில் கொரோனா ஏற்படுத்திய மரணங்களில் ஆறுமுகத்தின் மரணம் சற்று வித்தியாசமாக உள்ளதாக கீழ்பாக்கம் மருந்துவமனை டீன் வசந்தாமணி கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து வசந்தாமணி கூறுகையில், '' உடலில் உள்ள திசுக்களில் ஆக்ஸிஜன் குறையும் போது, மூச்சு விட சிரமம் ஏற்படும். குழப்பம், பயம் அதிகரிக்கும்.  தன்னை அறியாமலேயே நோயாளி உயிரிழப்பை நோக்கி சென்று கொண்டிருப்பார் . தங்கள் உடலில் ஆக்ஸிஜன் குறைகிறது என்பதை நோயாளிகள் உணர்ந்திருக்க மாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு (SpO2) 94-96 சதவீதத்திற்கும் குறைவாக போது, மக்கள் மூச்சு விடத் திணறுவார்கள். அது, 80 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும் போது, மரணம் ஏற்பட்டு விட வாய்பு அதிகம். இதயம் ஆக்ஸிஜன் அதிகம் தேவைப்படும் உறுப்பு ஆகும். ஹைபோக்ஸியா ஏற்பட்டால் இதய தசை‘கள் சேதமடைந்து கார்டியாக் அரெஸட் ஏ ற்பட்டு விடக் கூடும். 

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் நிபுணர் குழு, , கொரோனா அறிகுறி தெரிந்த, அறிகுறி இல்லாத நோயாளிகள் அனைவருக்குமே உடலில் ஆக்ஸிஜன் அளவை முறையாக பரிசோதிக்க வேண்டும். .ஹைபோக்ஸியா தாக்கும் போது, நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தினாலும் அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்காது''  என்று எச்சரித்திருந்தது/ 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments